
திரெங்கானு; செப் 5 – ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதற்காக கார் ஒன்றை கையூட்டாக பெற்ற அரசாங்க ஊழியர் ஒருவர் திரெங்கானுவில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெமாமான் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வாக்குமூலம் கொடுத்த பின்பு அவர் அங்கேயே கைதாகியதாக மாநில இயக்குனர் Hazrul Shazreen Abd Yazid கூறினார்.
50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 90,000 ரிங்கிட் விலையுள்ள அக்காரை பெற்றுள்ளார்.
தமது துறையிலிருந்து 230,000 ரிங்கிட்டுக்கான பொருள் கொள்முதல் ஒப்பந்தத்தை 2017 தொடங்கி ஒரு நிறுவனத்திடம் கொடுத்ததற்காக அவருக்கு அக்கார் கையூட்டாக வழங்கப்படிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
50 வயது மதிக்கத்தக்க அந்த நிறுவனத்தின் உரிமையாளரும்
மேல் விசாரணைக்காக தற்போது கைது செய்யப்பட்டுளார்.