Latestமலேசியா

காரை மோதிய பெண்ணின் கைப்பையை பறித்த ஆடவன் கைது

ஷா ஆலாம், நவ 28- கிள்ளானில் இருந்து கோலாலம்பூர் செல்லும்  கூட்டரசு நெடுஞ்சாலையின்  14. 6- வது கிலோமீட்டரில் ,  தனது காரை இடித்த பெண்ணின்   கைப்பையை பறித்த  ஆடவரைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

அதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்  நேற்று மாலை மணி 6. 30-க்கு ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததிருந்தார். அதையடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக  ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர்  பஹாரூடின்  மட்  தாய்ப்  தெரிவித்தார்.

சம்பவத்தின் போது,  BMW  காரை  ஓட்டியிருந்த பெண்,  Gen 2  காரை பின்புறம்  இருந்து மோதியுள்ளார். அதையடுத்து அந்த GEN 2  கார் ஓட்டுநர்,    முன்புறம்  பெண் ஒருவர் ஓட்டிய   Honda HRV காரை  மோதினார். இச்சம்பத்தில் யாரும் காயமடையவில்லை.   இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

அந்த காணொளியில், தனது காரை மோதிய பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்ட ஆடவர்,   போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய தன்னை பின்தொடரும்படி அப்பெண்ணைக் கேட்டுக் கொண்டதை  காண முடிந்துள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!