Latestஉலகம்

மற்றொரு தொற்று நோயா? சீனப் பள்ளிகளில் மர்ம நிமோனியா பரவுகிறது

பெய்ஜிங், நவ 23 – கோவிட் -19 தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத சீனா, இப்போது ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் லியோனிங் பள்ளிகளில் மர்மமான நிமோனியா பரவியிருப்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆபத்தான சூழ்நிலை, கோவிட் நெருக்கடியின் ஆரம்ப நாட்களை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. மர்ம நியேனியா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு சீனாவின் சுகாதார அமைப்பு மீது அச்சுறுத்தும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பெய்ஜிங் மற்றும் 500 மைல் தொலைவில் லியோனிங்கில் அமைந்துள்ள மருத்துவமனைகள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் வருகையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

இந்த புதிய தொற்றினால் பள்ளிகள் மூடப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் நுரையீரல் வீக்கம் மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அசாதாரண அறிகுறிகளுடன் உள்ளனர். ஆனால் வழக்கமான இருமல் மற்றும் காய்ச்சல், மற்றும் பிற சுவாச நோய்களுடன் தொடர்புடைய பிற அறிகுறிகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில், மருத்துவமனைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் வருகையால் போராடி வருகின்றன. அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உலகளாவிய நோய் பரவலை கண்காணிக்கும் கண்காணிப்பு தளமான “ProMed”, கண்டறியப்படாத நிமோனியா குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்கும் தொற்றுநோய் குறித்து செவ்வாய்க்கிழமை எச்சரிக்கையை வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!