
பாசிர் பூத்தே, செப்டம்பர் 11 – கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், ஆறாம் ஆண்டு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
19 வயது நூர் அலியா முஹமட் அரிப் எனும் அவர், தோக் ஜங்கோட் இடைநிலைப்பள்ளி மாணவி ஆவார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை, நண்பகல் மணி 12.45 வாக்கில், பாசிர் பூத்தேவிலிருந்து அவர் தனியாக ஜெராம் பாசு நோக்கி பயணித்த போது அவ்விபத்து நிகழ்ந்தாக, பாசிர் பூத்தே போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜைசுஸ் ரிஷால் ஜகாரியா தெரிவித்தார்.
அவ்விபத்து தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்