
சிலாங்கூர், ஜின்ஜாங்கில், கார் கண்ணாடியை உடைத்து இரு மடிக் கணினிகளையும், 11 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடியதாக நம்பப்படும் 64 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, 17 பழைய குற்றப் பதிவுகளை கொண்டிருக்கும் அம்முதியவர், கைது செய்யப்பட்ட போது சற்றும் தயக்கமின்றி காணப்பட்டார்.
பெண் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் வாயிலாக அம்முதியவரும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 29 வயது ஆடவன் ஒருவனும் கைது செய்யப்பட்டதாக, செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் பே எங் லாய் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து 11 மடிக் கணினிகள், இரு கைப்பேசிகள், மூன்று Touch ‘n Go அட்டைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவகங்களுக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து திருடும் பொருட்களை அம்முதியவர், சம்பந்தப்பட்ட ஆடவன் வாயிலாக விற்று வந்ததும் தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது