
ஈப்போ, ஜன 7 – ஈப்போ மேரு ராயா தீயணைப்பு நிலையத்திற்கு முன்புறம் உள்ள பெரிய கால்வாயில் Honda கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 29 வயதுடைய R .Dhaarnish மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினார். மாண்ட மற்றொருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. இன்று விடியற்காலை மணி 5.19 அளவில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த காரை ஓட்டியவரும் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஆடவரும் மரணம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்களின் உதவியோடு இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.