
ஷா அலாம், மே 27 – Kesas நெடுஞ்சாலையில் கார் ஒன்று கவிழ்ந்த சாலை தடுப்பில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 35 வயதுடைய மற்றும் 37 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பயணம் செய்த BMW கார் இன்று விடியற்காலை 5 மணியளவில் Shah Alam மில் kesas நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் விபத்துக்குள்ளனாதில் கடுமையாக காயம் அடைந்த அந்த சகோதரர்களில் ஒருவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். காரின் முன் இருக்கையில் சிக்கிக் கொண்ட அந்த ஆடவரின் உடல் தீயணைப்பு அதிகாரிகளின் உதவியோடு மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படையின் வீரர்கள் வருவதற்கு முன்னதாக அக்காரை ஓட்டியவர் காரிலிருந்து வெளியேறினார். எனினும் அவர் காயம் அடையவில்லை என தீயணைப்பு அதிகாரி Wan Mohd Razali தெரிவித்தார்.