
கோலாலம்பூர், ஜன 14 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் Behrang டோல் சாவடியின் வெளியேறும் பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உப்சி (UPSI ) பல்கலைக்கழக மாணவி M. Yoogavani ( யோகவாணி) உயிரிழந்தார். அந்த விபத்தில் இதர நான்கு மாணவிகள் காயம் அடைந்தனர்.
நேற்று பிற்பகல் மணி 2.55 அளவில் விபத்து நிகழ்ந்த வேளை, நிகழ்விடத்திலேயே 20 வயதுடைய Yoogavani இறந்தார். அந்தக்காரில் பயணம் செய்த மாணவிகள் அனைவரும் பேராக், Batu Gajah விலிருந்து Tanjung Malim மிலுள்ள உப்சி பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
Yoogavani ஓட்டிச் சென்ற ஹோன்டா சிட்டி கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுவதற்கு முன் சாலையின் வலது பக்கம் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த விபத்தில் காயம் அடைந்த இதர மாணவிகள் அனைவரும் சிலிம் ரீவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் . மரணம் அடைந்த Yoogavani பினாங்கு , Sungai Jawi யை சேர்ந்தவராவார்.