மலேசியா

கார் கால்வாயில் விழுந்தது; சதிஸ்குமார்- பூபாலன் உயிரிழந்தனர் 

சிப்பாங், ஜூன் 26 –     சுங்கை  பீலேக்கிலிருந்து பந்திங்கை நோக்கி சென்று  கொண்டிருந்த  புரோட்டோன் பெர்டானா கார்  ஜாலான் தஞ்சோங் செப்பாட் –  பந்திங் சாலையில் தஞ்சோங் ரூவுக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து   எதிரேயுள்ள கால்வாயில் விழுந்தது.
இந்த விபத்தில் அந்த காரை ஓட்டிய சுங்கை பீலேக்கை சேர்ந்த  29 வயதுடைய சதிஸ் குமார் மாய முருகன் மற்றும்  அருகே அமர்ந்திருந்த  பூபாலன் சூரியகுமரன்  மாண்டனர்.
லோரி ஓட்டுனராக வேலை செய்த வந்த  சதிஸ் குமார் மற்றும் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் வேலை செய்துவந்த சுங்கை பீலேக்கை சேர்ந்த   28 வயதுடைய பூபாலன் ஆகிய இருவரும் விபத்தி நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
நேற்று காலை  11.30 மணியளவில் தஞ்சோங் ரூவில் இவ்விபத்து நிகழ்ந்தாக தகவல் அறிந்து   சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றபோது அங்கு  சதிஸ் குமாரும், பூபாலனும் இறந்தி கிடந்ததாக சுங்கை பீலேக் போலீஸ் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் அவ்விருவரும் இறந்ததாக நம்பப்படுகிறது.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!