
மலாக்கா, ஜன 25 – ஜாசினில், கார் ஒன்று சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று அதிகாலை மணி 5.35 வாக்கில் அவ்விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்தாக, புக்கிட் காத்தில் தீயணைப்பு மீட்புப் படை கோமாண்டோ கமாரூடின் மாட் அமின் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான காரின் ஓட்டுனர் இருக்கையில் சிக்கி கொண்டிருந்த பெண்ணை தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் மீட்ட போதிலும், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.