
ஈப்போ, ஜன 20 – ஈப்போ, Jalan Kuala Pari சாலையில் சென்று கொண்டிருந்த
Peugeot காரில் திடீரென தீப்பற்றியதை உணர்ந்த அதன் ஓட்டுனர் உடனடியாக கீழே இறங்கியதால் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். தீயினால் அந்த கார் 90 விழுக்காடு அழிந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். காலை மணி 9.52 அளவில் இது குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்தபோதிலும் அதற்குள் தீ வேகமாக பரவியதாக அந்த பேச்சாளர் கூறினார்.