
ஜொகூர், ஜன 25 – பத்து பஹாட்டிலுள்ள, கார் நிறுத்துமிடத்தில், அடையாளம் எதையும் உடன் வைத்திருக்காத ஆடவர் ஒருவர், தலையில் காயத்துடன் சுயநினைவு அற்ற நிலையில் விழுந்து கிடக்க காணப்பட்டார்.
இரவு மணி எட்டு வாக்கில், பொது மக்கள் வாங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 50 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் இறந்து விட்டதை உறுதிச் செய்ததாக, பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
முன்னதாக, அவ்வாடவருக்கும், 43 வயது அந்நிய நாட்டவர் ஒருவருக்கும் இடையில் சண்டை நிகழ்ந்தது, சம்பவ இடத்திலிருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக தெரிய வந்தது.
தப்பியோட முயன்ற அந்த அந்நிய நாட்டு ஆடவனை, பணியில் இருந்த பாதுகாலவர் ஒருவர் வளைத்து பிடித்த வேளை ; விசாரணைக்காக அவன் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.