Latestமலேசியா

1,000 த்திற்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர தொழில்துறை வர்த்தகர்களுக்கு ரி.ம 2.5 பில்லியன் கடன் வசதிக்கு SME பேங்க் அனுமதி – டத்தோ ரமணன் தகவல்

கோலாலம்பூர், ஜன 11 – இவ்வாண்டு 4 பில்லியன் ரிங்கிட் வரை தொழில் முனைவர் வளர்ச்சி  திட்டத்திற்கு SME வங்கி ஒதுக்கியுள்ளது. அவற்றில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை வர்த்தகர்களுக்கான கடனுவிக்காக SME வங்கி 2.5 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.  எனவே இந்த வாய்ப்பை  சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்த இந்திய வர்த்தகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறைவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தமது அமைச்சின் கீழ் இயங்கும் SME வங்கியின் சிறப்பு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ரமணன் வணக்கம் மலேசியாவிடம் இது குறித்து  விளக்கம் அளித்தார்.  

இதனிடையே SME நிதிகளுக்கு எப்படி மனுச் செய்வது என்பது தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவுவதற்கு செடார் எனப்படும் வழிகாட்டி திட்டத்தை SME வங்கி தொடங்கியிருப்பது குறித்தும் ரமணன் வரவேற்றார்.  இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெறுவதற்கு     விண்ணப்பம் செய்வது தொடர்பான பல்வேறு வழிகாட்டல்களை சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையை சேர்ந்தவர்கள் பெறமுடியும். சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையில் ஈடுபடுவோர் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவதற்கு கடனுதவிகளை வழங்கும்படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமது அமைச்சின் கீழ் உள்ள SME வங்கி வழங்கும் வாய்ப்புக்களை இந்திய வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன்   நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!