
தாப்பா, செப்டம்பர் 18 – ஜாலான் தாப்பா – கேமரன் மலை சாலையில், கார் ஒன்று, ஐந்து மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு இராணுவ வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.
இன்று காலை மணி 9.50 வாக்கில், 23 மற்றும் 28 வயதுடைய அவர்கள் கேமரன் மலையிலிருந்து தைப்பிங் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்தது.
பள்ளத்தில் கவிழ்ந்த காரிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருந்த அவர்களை, 40 நிமிட பேராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
காரோட்டியான 28 வயது ஆடவருக்கு இடது கால் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டிருந்த வேளை ; அவருடன் பயணித்த நண்பருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததால் அவர்கள் உடனடியாக தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.