காஜாங், பிப் 15 – மரணம் ஒருவருக்கு எப்படி நேரும் என்று தெரியாது. அதுபோன்று நேற்று மாலை காஜாங், Taman Berjaya- விலுள்ள sungai Chua திடலில் காற்பந்து போட்டியின் நடுவராக செயல்பட்டு வந்த ஆடவர் ஒருவர் திடிரேன மயங்கி உயிரிழந்தார்.
ஆட்டம் தொடங்கிய 19-வது நிமிடத்தில், சம்பந்தப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க ஆடவர், திடலின் நடுவே மயங்கி விழுந்து சுயநினைவற்ற நிலையில் இருந்ததாக, காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் மொஹமட் சயிட் ஹாசான் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ பணியாளர்கள் அவர் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.