
சான்டோஸ், ஜன 3 – பிரேசிலின் பிரபல காற்பந்து நட்சத்திரமான மறைந்த Pele (பீலேயின்) நல்லடக்கச் சடங்கு இன்று நடைபெறும். நேற்று முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் காற்பந்து நட்சத்திரங்களும் அவரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 4.4 ஏக்கர் நிலப்பரப்பில் 14 அடுக்கு மாடிகளைக் கொண்ட ( Necropole Ecumenica ) நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பிலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். காற்பந்து விளையாட்டடை ஒரு கலையாக மாற்றி உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் ஈர்த்தவர். உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்று மகுடம் சூடிய பிலே தமது 82 – ஆவது வயதில் புற்றுநோய் பாதிப்பினால் டிசம்பர் 29 – ஆம் தேதி காலமானார்.