கோலாத்திரெங்கானு, மே 3 – திரெங்கானு காற்பந்து குழுவின் விளையாட்டாளர் Akhyar Rashidடை தாக்கி அவரிடம் கொள்ளையிட்ட இரண்டு ஆடவர்களை போலீசார் தேடிவருகின்றனர். ஒரு அடுக்ககத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும் அடையாளம் தெரியாத இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்ட Akhyar தலையில் நான்கு தையலுக்கு உள்ளானதோடு இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காகவும் இரண்டு தையல்கள் போட்ப்பட்டதாக கோலாதிரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Azli Mohd Noor தெரிவித்தார். தலையில் நான்கு சென்டிமீட்டர் அளவுக்கு அவர் காயத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே அந்த காற்பந்து விளையாட்டாளருக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டதாக Azli கூறினார்.
25 வயதுடைய தேசிய காற்பந்து விளையாட்டாளருமான Akhyar , Kuala Nerus , Gong Badak கில் பயிற்சியை முடித்துக்கொண்டு தமது விட்டிற்கு திரும்பியபோது இரவு மணி 8.30 அளவில் தாக்கப்பட்டார். முகத்தில் முகக் கவரியை அணிந்திருந்த அந்த சந்தேக நபர்கள் தங்களது தலையையும் மூடியிருந்ததனர். அவர்கள் ஒரு இரும்பினால் தாக்குதல் நடத்தியபின் Akhyarயின் பணப் பையிலிருந்து சுமார் 5,000 ரிங்கிட்டை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து ஒரு காரில் தப்பிச் சென்றதாக Azli கூறினார்.