கோலாலம்பூர், ஏப்ரல் 9 – கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள இரு பகுதிகளில், இன்று காலை மணி எட்டு நிலவரப்படி, காற்று தூய்மைக்கேட்டு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சிலாங்கூர், பந்திங்கில் காற்று தூய்மைக்கேட்டு குறியீடு 163-ஆக பதிவாகியுள்ள வேளை ; கிள்ளானில் 135-ஆக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 48 இடங்களில், காற்று தூய்மைக்கேட்டு குறியீடு 51 முதல் 100 வரையில், மிதமான அளவில் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நெகிரி செம்பிலான் ரோம்பினிலும், நீலாயிலும் முறையே 99-ஆக பதிவாகியுள்ள வேளை ; குவந்தானில் 98-ஆகவும், செராசில் 96-ஆகவும், புத்ராஜெயாவில் 95-ஆகவும் உள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள 17 இடங்களில், காற்று தூய்மைக்கேட்டு குறியீடு ஐம்பதுக்கும் கீழ் ஆரோக்கியமான முறையில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஜோகூர் கோத்தா திங்கி, சபா, சண்டகான், லபுவான், கோத்தா கினபாலு, கெமாமான் ஆகிய பகுதிகளே அவை.