ஜோர்ஜ் டவுன், ஜூன் 26 – இல்லத்தரசிகள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள், இப்பொழுது உள்ள விலை உயர்வின் சுமையை சமாளிக்க தங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழச்செடிகள் அல்லது மூலிகைகள் பயிரிட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி சுப்பராவ் கேட்டுக்கொண்டார். வீட்டிற்கு வெளியே காலியிடங்களில்,காய்கறிகளை பயிறிடுவதற்கு பொதுமக்கள் முயற்சி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தங்களது பணிமனையில் இருந்த காலியான நிலத்தில் பூசணிக்காயை பயிரிட்டதோடு மூன்று மாதங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட 25 பூசணிக்காய்களை அறுவடை செய்ததாக சுப்பராவ் சுட்டிக்காட்டினார். விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கை செலவின அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை சமாளிப்பதற்கு காய்கறிகள் சிறிய அளவில் பயிரிடுவது தினசரி பயனீட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என சுப்பராவ் தெரிவித்தார்.