கோலாலம்பூர், பிப் 4 – நாளை சனிக்கிழமையும் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மற்றும் தெற்கு நெடுஞ்சாலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு திரும்பும் வாகன ஓட்டுனர்கள் காலை 9 மணிக்குள் நெடுஞ்சாலைக்குள் நுழைந்துவிடும்படி plus நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. சீனப் புத்தாண்டின் இரண்டாவது தினமான பிப்ரவரி 2 ஆம்தேதி வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வாகனங்கள் புறப்பட்டதால் போக்குவரத்து அதிகமாக இருந்ததன.
எனவே பிப்ரவரி 5, 6 ஆம் தேதிகளிலும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களை நோக்கி கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி செல்வார்கள் என்பதால் பிளஸ் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிச்சல் அதிகரிக்கும். எனவே நெடுஞ்சாலையை பயன்படுத்துவோர் தங்களது பாதுகாப்பான பயணங்களுக்கு விவேகமாக திட்டமிடும்படி plus நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி டத்தோ Zakaria Ahmad Zabidi கேட்டுக்கொண்டார்.