மயாமி, ஃபுளோரிடா, மே-5, அமெரிக்கா ஃபுளோரிடாவில் தனது கால்சட்டையில் மறைத்து வைத்து 2 சிறிய ரக பாம்புகளைக் கடத்த முயன்ற ஆடவன், மயாமி அனைத்துலக விமான நிலையத்தில் போலீசிடம் சிக்கினான்.
வெள்ளிக்கிழமையன்று விமானம் புறப்படுவதற்கு முன் லக்கேஜ் பரிசோதனையின் போது, அந்நபரின் கால்சட்கைக்குள் துணியிலான சிறிய பை ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
சந்தேகத்தில் சோதித்ததில் அதனுள் இளஞ்சிவப்பிலான 2 பாம்புகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றை ஃபுளோரிடா வனவிலங்குத் துறையிடம் ஒப்படைத்த அதிகாரிகள், அவ்வாடவனைத் தடுத்து வைத்தனர்.
அவ்விரு பாம்புகளும் அந்நபர் வளர்த்து வருபவையா? எதற்காக அவற்றை விமானத்தில் கொண்டு போக முயன்றார் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
அந்நபர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவாரா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.