
சபா, பெனாப்பாங்கிலுள்ள, கால்வாய் ஒன்றுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம், கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்து செல்லப்பட்டது என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
கால்வாயில் நான்கு சக்கர வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டிருக்கும் காணொளி வைரலாகி இருப்பதை தொடர்ந்து போலீசார் விளக்கமளித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை, ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து, பெருக்கெடுத்து ஓடிய நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
எனினும், அவ்வாகனத்தின் ஓட்டுனர், அதிலிருந்து வெளியேறி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.