
காஜாங், அக்டோபர் 3 – சுமார் 2.44 மீட்டர் ஆழமுள்ள சாக்கடையில் சிக்கித் தவித்த வீடற்ற நபர் ஒருவரை, தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
அச்சம்பவம், இன்று காலை மணி 8.24 வாக்கில், ஜாலான் துன் அப்துல் அஜிஸ் பகுதியில் நிகழ்ந்தது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர், பாதிக்கப்பட்ட நபரை சாக்கடையிலிருந்து பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அதன் பலனாக, பத்து நிமிடங்களில், அந்த 40 வயது நபர் சாக்கடையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்பதையும், சிலாங்கூர் தீயணைப்பு மீட்புப் படையினர் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.