
சுங்கைப் பட்டாணி , மே 7 – கெடா, சுங்கைப் பட்டாணி Taman Perpaduan னில் ஒரு விட்டிற்கு பின்னால் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அங்குள்ள கால்வாயில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று மாலை மணி 5.47 அளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற போலீஸ் குழு இரவு உடை மட்டுமே அணிந்திருந்த பெண்ணின் சடலத்தை மீட்டதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் Zaidy Che Hassam தெரிவித்தார். மருத்துவ பரிசோதனைக்காக அந்த பெண்ணின் உடல் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.