Latestமலேசியா

பாஹாவில் நகைக்கடையை உடைத்து உள்ளே புகுந்த ஆடவனுக்கு போலீஸ் வலைவீச்சு

ஜெம்போல், மார்ச் 12- இம்மாதம் 8 ஆம் தேதி Bahau வில் உள்ள நகைக்கடையை உடைத்து உள்ளே புகுந்ததாக நம்பப்படும் ஆடவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அன்றைய தினம் காலை மணியளவில் அந்த நகைக்கடையை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் குறித்து அக்கடையின் ஊழியரிடமிருந்து போலீஸ் தகவலை பெற்றதாக Jempol மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hoo Chang Hook கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அன்றைய தினம் மாலை மணி 4.30 அளவில் சந்தேகப் பேர்வழி ஒருவன் Jempol வட்டாரத்தில் கைது செய்யப்பட்டான் . இன்னமும் தலைமறைவாக இருந்துவரும் நபருடன் சேர்ந்து அந்த நகைக்கடையை உடைத்து உள்ளே புகுந்ததை அந்த சந்தேகப் பேர்வழி ஒப்புக்கொண்டது முன்னோடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூரை பகுதியில் ஏறி அக்கடையின் சீலிங்கை அந்த சந்தேகப் பேர்வழி உடைத்ததாக Hoo chang Hook வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மார்ச் 8 ஆம்தேதி நள்ளிரவு 12 மணிக்கும் காலை 6 மணிக்குமிடையே அவர்கள் இந்த குற்றத்தை புரிந்துள்ளனர். அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் மார்ச் 7ஆம் தேதி அந்த தங்கக் கட்டிகளை விற்பனை செய்வதற்கு அக்கடைக்கு வந்தது அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காணொளியின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த தங்கக் கட்டிகள் போலீயானது என்பதால் அவற்றை அந்த நகைக்கடை ஊழியர்கள் வாங்கிக்கொள்ளவில்லை. மலாக்கா , Machap என்ற இடத்தைச் சேர்ந்த Danial என்ற சந்தேகப் பேர்வழியை காணும் பொதுமக்கள் உடனடியாக இது குறித்து தகவல் வழங்கி உதவும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!