Latestஇந்தியாசினிமா

காவல் துறையின் மரியாதையோடு 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடல் தகனம்

தமிழ்நாடு, ஏப் 17 – காவல் துறையின் மரியாதையோடு 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாரடைப்பினால் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று காலை முதல் விருகம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. விவேக்கின் உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் , கலையுலகம், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரமுகர்கள் உட்பட பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது கலை, சமுகச் சேவையை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் அவரது உடலை அரசு தகனம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.

நடிகர் விவேக்கின் உடலுக்கு 78 துப்பாக்கி குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். அதன்பின் அவரது உடல் மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!