
காஸா, நவ 5 – காஸாவில் தொடர்ந்து சண்டை மோசமடைந்து வருகிறது. காஸாவில் நுழைந்துள்ள இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் தரப்பினருக்கு எதிராக மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி ப்லிங்கின் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதல் குறையவில்லை. காஸாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்ற கடப்பாட்டை ப்லிங்கின் உறுதிப்படுத்திய வேளையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யோஅவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார்.
காஸா நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து இஸ்ரேலிய படைகள் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இதனிடையே ஐ.நா நடத்திவரும் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.