Latestஇந்தியாஉலகம்விளையாட்டு

கிக் பாக்ஸிங் போட்டியில் விபரீதம்; தலையில் பலத்த காயமடைந்து அருணாச்சல பிரதேச வீரர் மரணம்

சென்னை, ஆகஸ்ட் 26 – சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் எனும் காலுதைப் போட்டியின் இறுதிச் சுற்றில் தலையில் தாக்கப்பட்ட வீரர் யோரா தாடே (Yora Tade) உயிரிழந்தார்.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது யோரா தாடே, தலையில் பலம் கொண்டு உதைக்கப்பட்டதால், அங்கேயே மூர்ச்சையாகி கீழே விழுந்தார். பின்னர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

யோரா தாடேவின் மரணம் குத்துச்சண்டை விளையாட்டுக்குப் பேரிழப்பு எனக் கூறியிருக்கும் அருணாச்சல பிரதேச முதலமைச்சர், வளர்ந்து வரும் வீரரை நாடு இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனும், உயிரிழந்த வீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் தனது சொந்த நிதியில் இருந்து 50,000 ரூபாயை வழங்கினார்.

குத்துச்சண்டையை விட கிக் பாக்ஸிங் சற்று ஆபத்தான விளையாட்டாகும். குத்துச்சண்டையில் உங்கள் கைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் கிக் பாக்ஸிங்கில் கை, தலை, கால் என அனைத்தையும் பயன்படுத்தி எதிராளியை தாக்கலாம் என்பதால் இது ஆபத்தான விளையாட்டாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!