Latestசினிமா

“கிணற்றை காணோம்” புகழ் நடிகர் நெல்லை சிவா காலமானார்

சென்னை, மே 11- தமிழ் திரையுலகில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நெல்லை சிவா இன்று மாலை மாரடைப்பால் காலமானார். உடல் நலமில்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெல்லை சிவா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள அவர், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆண் பாவம் மூலம் அறிமுகமான நெல்லை சிவா இன்று மாலையில் மாரடைப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து மரணம் அடைந்தார்.

60 வயதான அவர் வெள்ளித் திரை மட்டுமின்றி சின்னத் திரையிலும் நடித்து வந்தார். அஜித் குமார் நடித்த அட்டகாசம் படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலாமானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நெல்லை சிவா நடித்து வந்தார்.

வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த ” கிணற்றை காணோம் ” நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். அதன் பின்னர் வடிவேலுவுடன் இணைந்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, எலி. வெற்றிக் கொடி கட்டு , படிக்காதவன், சாமி , பாபநாசம் , கிரீடம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!