
கோத்தா கினாபாலு, மார்ச்-25 – சபா, கினாபாலு மலையிலிருந்து இறங்கும் போது தவறி விழுந்து, 56 வயது சிங்கப்பூர் மாது தலையில் காயமடைந்தார்.
நேற்று காலை 7 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தகவல் கிடைத்து, ரானாவ் தீயணைப்பு-மீட்புத் துறையினர், மலை மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர் என 17 பேர் சம்பவ இடம் விரைந்தனர்.
கீழே விழுந்ததில் தலையில் இரத்தம் கொட்டிய அம்மாதுவுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு, பின்னர் அம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.
மீட்புப் பணிகள் நண்பகல் 12 மணிக்கு நிறைவுற்றன.