ரானாவ் , பிப் 15 – இனிய அனுபவமாக அமைய வேண்டிய இருவரின் சாகச நடவடிக்கை இறுதியில் மறக்க முடியாத கசப்பான சம்பவமாக மாறியது. நேற்று காலை, சபா , கினாபாலு மலையில் இருந்து பாராகிளைடிங் எனப்படும் வான்குடை வாயிலாக பறக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு ஆடவர், மலையின் மேற்பரப்புடன் மோதி காலில் காயமடைந்தார்.
இதனிடையே, மற்றொரு பிரான்ஸ் ஆடவர், அந்த மலையின் Kiau View Trail பகுதியில் உள்ள மரத்தில் சிக்கிக் கொண்டார்.
அவ்விருவரும் காப்பாற்றப்பட்டு , ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என சபா, தீயணைப்பு மீட்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.