
கோலாலம்பூர், ஆக 21 – பூச்சோங், Jalan Mas, கின்ராரா மாஸ்சில்
அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நாக சதுர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கின்ராரா வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 500 முதல் ஆயிரம் பக்தர்கள் வரை அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாலபிஷேகம் நிகழ்வில் கலந்துகொண்டனர். 25 ஆண்டாக நடைபெற்ற நாக சதுர்த்தி விழாவில் பக்தர்கள் திரளாக வருகை புரிந்து நாகேஸ்வரி அம்மானுக்கு பாலபிஷேகம் செய்ததாக ஆலயத் தலைவர் டத்தோ மகேஸ்வரி முனியாண்டி தெரிவித்தார்.
இந்த ஆலயம் தற்போது இருந்துவரும் இடத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் பிரார்த்தனையாக இருந்ததாக அவர் கூறினார். இதனிடையே நாக சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை புரிந்த சுரேஷ் சிங்கிற்கு ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். மிகவும் சிறப்பான முறையில் நாக சதுர்த்தி விழாவை ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவினருக்கு அவர் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.