
ஜொகூர் பாரு, ஆக 25 – ஜொகூர் பாருவில் Jalan Pekeliling கில் தொழிற்சாலை ஒன்றில் Styrene ரசாயனம் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாசீர் கூடாங் வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் Sungai Kim kim மில் மீண்டும் சுற்றுப்புற தூய்மைக் கேடு ஏற்படலாம் என சிறார்கள், மூத்த குடிமக்கள் உட்பட ஆயிரக்கணக்கான சுற்று வட்டார மக்கள் தங்களது அச்சத்தை வெளியிட்டனர். கடந்த 2019 ஆம்ஆண்டு Sungai Kim Kim மில் ஏற்பட்ட சுற்றுப்புற தூய்மைக்கேடு பாதிப்பை அவ்ளவு எளிதில் மறந்துவிட முடியாது என அங்குள்ள மக்களில் பலர் தெரிவித்தனர். எனவே இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்டாமல் இருப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.