
பேங்காக், ஜன 27 – தென் தாய்லாந்தில் கிராபி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த மலேசிய கர்ப்பிணியும் அவரது ஆறு வயது மகளும் இறந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிர் தப்பிய அப்பெண்ணின் கணவரும் படகு ஓட்டுனரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். Poda தீவை சுற்றிப் பார்ப்பதற்காக 36 வயது பெண்ணும் அவரது கணவர் மற்றும் அவர்களது மகளும் அந்த படகில் ஏறிச் சென்போது உள்ளூர் நேரப்படி பிற்பகல் ஒரு மணியளவில் பெரிய அலை மோதியதால் அப்படகு கவிழ்ந்ததாக கிராபி மாநிலத்தின் கவர்னர் Passakorn Bunyalak தெரிவித்தார்.