கிரிக், ஆக 6 – தனது உறவினரின் ஆறு வயது பேத்தியை மானபங்கம் செய்தது தொடர்பில் ஆடவன் ஒருவன் விசாரணைக்காக ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். கிரிக் (Gerik) , Kampung Kenayat ட்டில் நடந்த அந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உதவும் பொருட்டு 54 வயதுடைய அந்த ஆடவனை தடுத்து வைக்கும் உத்தரவுக்கு மாஜிஸ்திரேட் சவிந்தர் சிங் ஜொகிந்தர் சிங் (Savinder Singh Juginder Sing ) அனுமதி வழங்கினார்.
அந்த ஆடவன் 2017 ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் பாலியல் குற்றச்சாட்டு 14ஆவது விதி உட்பிரிவு (a) யின் கீழ் நேற்று கைது செய்யட்டான்.
தனது சிறுமியின் பாட்டி வீட்டில் இருந்த குடிலில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் அந்த ஆடவன் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று அந்த சிறுமியின் தாயார் புகார் செய்ததை தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கிரிக் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நிபுணத்துவ மருத்துவமனைக்கும் கொண்டுச்செல்லப்பட்டதாக அஸிஸி மாட் அரிஸ் தெரிவித்தார்.