
ஏதென்ஸ், ஆக 26 – கிரீஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான Grand Cross of the Order of Honour விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் கிரீஸ் நட்புறவுக்கு ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றிய பிரதம மோடிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கிரீஸ் அதிபர்
Katerina Sakellaropoulou தெரிவித்தார்.
இந்தியா மீது கிரிஸ் மக்கள் வைத்துள்ள மரியாதையின் அடையாளத்தை இந்த விருது குறிக்கிறது. எனவே இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என மோடி தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பின் கிரிஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வ வருகையை மோடி மேற்கொண்டுள்ளார். கிரீஸ் அதிபர் Katerina Sakellaropoulou , பிரதமர் Kyriakos Mitsotakis ஆகியோருடன் மோடி பேச்சு நடத்தினா