
இம்மாத தொடக்கத்தில் ரஷ்யா, கிரெம்ளினில் (Kremlin) மேற்கொள்ளப்பட்ட தோல்வியடைந்த ‘ட்ரோன்’ ஆளில்லா விமான தால்குதலின் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என அமெரிக்கா நம்புவதாக, தி நியூ யோர்க் டைம்ஸ் (The New York Times) செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம், ரஷ்ய எல்லைக்குள் நிகழ்ந்த ஊடுருவல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியிலும் உக்ரேனே செயல்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரெம்ளினில் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தது என்பது தங்களுக்கு தெரியாது என உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதை மேற்கோள்காட்டி அமெரிக்க அதிகாரிகள் அவ்வாறு கூறியுள்ளனர்.
அதோடு, அந்த தாக்குதல் குறித்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு (Volodymyr Zelensky) முன்பே தெரியுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான உரையாடல்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்கா அந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.