Latestஉலகம்

கிறிஸ்துமஸ் குதூகலத்தை பாதித்த கடும் பனிப் பொழிவு ; அமெரிக்காவில் 34 பேர் உயிரிழப்பு

நியு யோர்க், டிச 26 – கடும் பனிப் பொழிவுடன், பனிப் புயலும் வீசியதில், அமெரிக்கர்கள் பலர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . அமெரிக்கா, நியு யோர்க் மாநிலத்திலுள்ள Buffalo நகர், அதிகம் பனிப் பொழிவைப் பெற்று மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், 34 பேர் , வாட்டும் அந்த கடும் குளிரால் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Buffalo நகரில் மட்டும் , காருக்குள் இருந்தும், பனிக்குவியலுக்குள் இருந்தும் ஏழுவர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், Ohio, Missouri, Wisconsin, Kansas, Colorado ஆகிய பகுதிகளில் இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வேளையில், அமெரிக்காவின் கிழக்கேயுள்ள மாநிலங்களில் வசிக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் , கிறிஸ்துமஸ் காலையன்று, மின்சாரம் இன்றி விழித்தெழுந்ததனர். இதனிடையே, பார்க்கும் தூரம் மோசமாக பாதிக்கப்பட்டதால் , ஆயிரக்கணக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், பலர் கிறிஸ்துமஸ்-சை குடும்பத்தாரோடு கொண்டாடும் வாய்ப்பினை இழந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!