Latestமலேசியா

கிளந்தானில் எல்லை சுவர் திட்டத்திற்கு தாய்லாந்து இணக்கம்

நரத்திவாட், நவ 14 – கிளந்தானில் Rantau Panjangகிலுள்ள Sungai Golok ஆற்று நெடுகிலும் பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு சுவரை கட்டும் உத்தேச திட்டத்திற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

எல்லை கடந்த குற்றச் செயல்களை துடைத்தொழிப்பதற்கு இந்த சுவர் நிர்மாணிப்பு உதவும் என Narathiwat governor  தரக்குல் தோதம் ( Trakul Thotham ) தெரிவித்தார். தற்போது Sungai Golok ஆற்றில் நடப்பில் உள்ள சுவர் சட்டவிரோத எல்லை மீறல் நடவடிக்கை மற்றும் கடத்தலை தடுக்க உதவியிருப்பதாக அவர் கூறினார்.

அந்த சுவரை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்தால் மலேசியாவுடன் தாய்லாந்து ஒத்துழைக்கும். Sungai Golok ஆற்று நீர் கரைபுரண்டு Rantau Panjang கிற்கு நுழைவதை தடுப்பதற்கும் அந்த சுவர் உதவும் என இன்று சிறப்பு வருகை புரிந்த கிளந்தான் அதிகாரிகளை சந்தித்த பின் செய்தியாளர்களிம் பேசியபோது Trakul Thotham தெரிவித்தார்.

கடத்தல் மற்றும் வெள்ளத்தை தடுக்கும் நோக்கத்தில் தாய்லாந்துடன் 100 கிலோமீட்டர் எல்லையில் சுவர் கட்டும் அதிகாரப்பூர்வ ஆலோசனை புத்ரா ஜெயாவிடம் சமர்ப்பிக்கப்படும் என நவம்பர் 5ஆம்தேதி கிளந்தான் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!