
கோத்தா பாரு, செப்டம்பர் 12 – கிளந்தானில் மறுசீரமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும், 39 சுகாதார கிளினிக்குகள், அடுத்த மாதம் முழுமையாக செயல்படத் தொடங்கும்.
மோசமான நிலையிலிருந்த அந்த கிளினிக்குகளை தரம் உயர்ந்த. மொத்தம் 94 லட்சம் ரிங்கி ஒதுக்கப்பட்டதாக, கிளந்தான் மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்தார்.
அதே போல, கிளந்தானில், மோசமான நிலையிலுள்ள மேலும் சில கிளினுக்குகளை அடுத்தாண்டு தொடர்ந்து மேம்படுத்த, கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்காக மாநில சுகாதார துறை விண்ணப்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், ஜைனி சொன்னார்.
சேவை தரத்தை மேம்படுத்தும் வகையில், 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2025-ஆம் ஆண்டு வரையில், நாடு முழுவதுமுள்ள ஆயிரத்து 200 சுகாதார கிளினிக்குகள் மேம்படுத்தப்படுமென, கடந்த திங்கட்கிழமை பிரதமர் அறிவித்திருந்தார்.
அதே சமயம், மனநலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண, அரசாங்க – தனியார் துறைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து, மனநல சிகிச்சை மையத்தை நிறுவமும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.