Latestமலேசியா

கிளந்தானில் வெள்ளத்திற்கு இருவர் மரணம்

கோலா கிராய், பிப் 28 – கிளந்தானில் வெள்ளத்திற்கு இதுவரை இருவர் உயரிழந்தனர். Pengkalan Lan, kampung Kuala kris சில் Mohamad Ishak என்று அடையாளம் கூறப்பட்ட 70 வயது ஆடவர் Sungai Galas ஆற்றில் விழுந்ததால் மூழ்கி மாண்டார்.

நேற்றிரவு 7 மணியளவில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக Kuala Krai மாவட்ட போலீஸ் தலைவர் Suzaimi Mohamad தெரிவித்தார். Kadok கிற்கு அருகே Kampung Talang கில் Kubang Kilat இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த Mohamad Fazil என்ற 13 வயது மாணவன் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது நேற்று மாலை மணி 6.20 அளவில் கால்வாயில் விழுந்ததால் மூழ்கி மாண்டான்.

Mohamad Fazil விழுந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவே அவனது உடல் ம் மீட்கப்பட்டதாக கிளந்தான் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ Muhamad Zaki Harun தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!