கோத்தா பாரு, டிச 20 – 80 ஆண்டுகளுக்கும் மேலானது என நம்பப்படும்
2 ஆவது உலக போர்க்கால கோட்டை கிளாந்தான் ஆற்றோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. Jalan Post Office Lama வில் ஒரு அடுக்ககத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரிய மரம் ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து அந்த போர்க்கால கோட்டை கண்டுப்பிடிக்கப்பட்டதாக சுற்றுலா, கலை மற்றும் பாரம்பரிய விவகாரத்திற்கு பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ கமாருடின் முகமட் நோர் ( Kamaruddin Md Nor ) உறுதிப்படுத்தினார். சுற்றுப் பயணிகளை கவரும் மையமாக அந்த கோட்டையை பயன்படுத்தும் ஆலோசனையை கிளந்தான் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இதுவரை அந்த வரலாற்றுப்பூர்வமான கோட்டை தொடர்பான தகவல் எதுவும் மாநில அரசாங்கத்திடம் இல்லையென்றும், ஆற்றங்கரை பகுதி இடிந்த பின்னரே அந்த கோட்டை கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பதாக கமாருடின் தெரிவித்தார். இதற்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டிருந்த போதிலும் அந்த கோட்டையின் அமைப்பு பாதிக்கப்படவில்லை. பெரிய வெள்ளம் ஏற்படும் காலத்தில் அக்கோட்டைக்குள் குப்பைகள் உள்ளே புகுந்துள்ளதை காணமுடிகிறது. இது குறித்து மேல் விவரங்களை பெறுவதற்கு கிளந்தான் தொல்பொருள் கழகத்துடன் தங்களது தரப்பு ஒத்துழைக்கும் என அவர் தெரிவித்தார்.