பாசிர் மாஸ், மார்ச் 1 – கிளந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மூன்றாவது நபரின் உயிரைப் பறித்திருக்கின்றது.
Banggol Kulim அருகில் Kampung Kubang Kedepan பகுதியில் 15 வயது இளைஞன் வெள்ள நீரில் தவறி விழுந்து, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக, Pasir Mas மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Nasaruddin M Nasir தெரிவித்தார்.
அந்த இளைஞனின் உடல், தவறி விழுந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் மீட்பு படையினரால் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.