தும்பாட், மார்ச் 5 – கிளந்தானில் வெள்ளத்தினால் ஐந்தாவது நபர் உயிரிழந்துள்ளார். மார்ச 1ஆம்தேதி முதல் காணாமல்போன Muhamad Faizal Abdul Rahman என்ற மாற்றுத் திறனாளியின் உடல் Pasir Mas , Kampung Tok Sangkut ட்டிலுள்ள அவரது வீட்டிற்கு அருகே மீட்கப்பட்டது.
தமது குடும்பத்தினரின் கடைக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த ஆடவர் காணாமல்போனதாக இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தாக கிளந்தான் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ Muhamad Zaki Harun தெரிவித்தார்.
இதனிடையே கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் வெள்ள நிலைமை சீரடைந்துள்ளது. அவ்விரு மாநிலங்களிலும் தற்போது 4,308 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.