கிளானா ஜெயா, ஆகஸ்ட் -10 – சிலாங்கூர் கிளானா ஜெயாவில் உள்ள சமயப் பள்ளியின் பள்ளிவாசலில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் தலைமையாசிரியை உள்ளிட்ட 2 பெண்கள் காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் Surau Al-Ehsaniah Ahmadiah கழிவறையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பிறகு மாலை நேர வகுப்புக்கு தாமும் மற்ற ஆசிரியைகளும் தயாராகிக் கொண்டிருந்த போது உதவிக் கோரி சத்தம் கேட்டதாகவும், ஓடிப் போய் பார்த்தால் அங்கே தலைமையாசிரியை இடது கை முட்டியில் காயமடைந்திருந்ததாகவும் சல்வியா யூசோஃப் (Salwiah Yusof) எனும் ஆசிரியைத் தெரிவித்தார்.
மற்றொருவருக்கு வயிற்றிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்ந இருவருக்கும் சந்தேக நபருக்கும் முன்பின் அறிமுகமில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அந்த உள்ளூர் ஆடவரை தேடி வரும் போலீஸ் அத்தாக்குதலுக்கான காரணத்தையும் விசாரித்து வருகிறது.
அந்த சூராவில் ஏற்கனவே ஒருமுறை திருடுப் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.