Latestமலேசியா

கிளானா ஜெயா LRT ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது; RapidKL அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்-17, மின் விநியோகத் தடையால் நேற்று பாதிக்கப்பட்ட Kelana Jaya LRT ரயில் சேவை இன்று காலை 6 மணி தொடக்கம் வழக்கத்திற்குத் திரும்பியது.

இதையடுத்து, எப்போதும் போல உச்ச நேரங்களில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும், உச்ச நேரங்களுக்கு வெளியே 7 நிமிடங்களுக்கு ஒரு முறையும் Kelana Jaya வழித்தடத்திற்கான சேவைத் தொடரும் என RapidKL நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

எனினும், Kelana Jaya, Taman Bahagia, Asia Jaya ஆகிய LRT நிலையங்களில் Eskalator மற்றும் Lift வசதிகள் இன்னும் இயங்கவில்லை.

அவற்றைப் பழுதுப்பார்க்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவசர உதவித் தேவைப்படும் பயணிகள் அங்குள்ள பணியாளர்கள் அல்லது உதவி போலீசாரின் உதவியை நாடலாம் என RapidKL கூறியது.

சேவையில் ஏற்பட்ட தாமதத்திற்கு பயணிகளிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அது கூறியது.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மின் விநியோக முறையை மின்னல் தாக்கியதால் Kelana Jaya LRT சேவைப் பாதிக்கப்பட்டது.

இதனால், உச்ச நேர பயன்பாட்டுக்கு Subang LRT depoh-வில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!