
கோலாலம்பூர், மார்ச் 9 – கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் Pahang வட்டாரங்களில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகங்களை உடைத்து கொள்ளையிடும் அடாம் கொள்ளைக் கும்பலை சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐவரை போலீசார் கைது செய்யதனர். அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாரணைக்காக இம்மாதம் 10ஆம் தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Beh Eng lai தெரிவித்திதார். அவர்களிடமிருந்து 6,000 ரிங்கிட் ரொக்கம் , நகைகள் மற்றும் மருந்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேலும் இரண்டு கார்கள் ஆறு கைதொலைபேசிகள், இரும்பு பெட்டிகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பலைச் சேர்ந்த மற்றொரு சந்தேகப் பேர்வழி தேடப்படுவதாகவும் Beh Eng lai கூறினார்.