கிள்ளான், அக்டோபர் 14 – கிள்ளானில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது, 10 வயது மற்றும் 14 வயது சிறார்களைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்திவந்த இக்குழந்தைகளின் தாயும், மாற்றாந்தந்தையும் அதிரடியாக காவல்துறையால் கைதுச் செய்யப்பட்டிருக்கின்றனர்.
குழந்தைகளின் தாய் வேறு இடத்திற்கு வேலைக்குச் செல்ல, தாமான் டாயா, மேரு கிள்ளானில், அந்த மாற்றாந்தந்தை 3 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறான்.
இக்குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டு வேலைகளை செய்ய மறுத்தாலோ பழைய உணவுகளை உண்ண மறுத்ததாலோ அடிக்கடி இருவரும் தாக்கியிருக்கின்றனர்.
இதனிடையே, நெஞ்சைப் பதற வைக்கும் வண்ணம், இந்த மாற்றாந்தந்தை 10 வயது சிறுமியை பாலியல் ரீதியாக 5 வயது முதல் துன்புறுத்தி வந்திருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது.
இதை அறிந்தும், முறைப்படி திருமணம் செய்து கொள்ளாதா இந்த காதலனுக்கு தனது மகளை இரையாக்கிக் கொண்டிருந்த தாயின் கொடூரச் செயல், அண்டை வீட்டினரால் மலேசியா தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் சரவணனக்குத் தெரியவந்துள்ளது.
இவரின் உதவியுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இக்குழந்தைகளின் நிலை குறித்து இவ்வாறு தமிழர் குரல் கட்சியின் தலைவர் சரவணன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இதுகுறித்து காவல்துறையில் விவாதம் செய்ய வந்த இந்த தாயும் மாற்றாந்தந்தையும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தடுப்புக் காவலிலிருக்கும் இவர்கள் மீது கடும் விசாரணையை காவல்துறை முடக்கிவிட்ட நிலையில், தக்க தண்டனை வழங்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகச் சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.