பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5 – நேற்றிரவு கிள்ளானில், சட்டவிரோத மோட்டர் சைக்கிள் ஓட்ட பந்தயதில் ஈடுபட்டவர்கள், விபத்தில் சிக்கிய 17 வினாடி காணொளி தற்போது பரவலாக வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வைரலாவதற்கு முன்னதாகவே பதிவான அக்காணொளியில், இரு சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் மோதி ஓட்டுநர்களுடன் பயணித்தவர்களும் சாலையில் விழுந்து கிடப்பதை அக்காணொளியில் காணமுடிகிறது.
வேகக் கட்டுப்பாட்டை மீறி பாய்ந்து நெடுஞ்சாலையில் ஓட்டி வந்த அந்த மோட்டார் ஓட்டுநர்கள் மோதி விபத்துக்களானதும், மற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அவர்களைச் சுற்றி நடு சாலையில் நின்று கொண்டிருந்ததும் அக்காணொளியில் பதிவாகியிருக்கிறது.