மேரு, ஏப்ரல்-9, கிள்ளான் மேருவில் நண்பனுடன் சேர்ந்துக் கொண்டு Mercun Bola எனப்படும் பந்து பட்டாசு கொளுத்தி விளையாடிய 11 வயது சிறுவன், தீப்பொறிப் பட்டு வலது கையில் காயமடைந்துள்ளான்.
நேற்றிரவு 11 மணி வாக்கில் பள்ளிவாசலொன்றில் அச்சம்பம் நிகழ்ந்தது.
Tarawih தொழுகை முடிந்து நண்பர்களுடன் பள்ளிவாசலிலேயே தூங்கிக் கொள்வதாகப் பெற்றோரிடம் கூறிச் சென்ற அச்சிறுவன், அங்கு பட்டாசு வெடித்து விளையாடியிருக்கின்றான்.
பட்டாசைக் கொளுத்தி வீசும் போது, துரதிஷ்டவசமாக அது முன் கூட்டியே வெடித்து விட்டது.
அதன் தீப்பொறி அவனது வலதுக் கையில் பட்டு காயமேற்பட்ட நிலையில்; பள்ளிவாசலில் இருந்தவர்கள் முதலுதவிச் செய்துள்ளனர்.
பின்னர் மருத்துவனைக்குக் கூட்டிச் சென்றதில், அறுவை சிகிச்சை அளவுக்குப் போகும் அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.